நாட்டில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 800 ஐக் கடந்தது!
நாட்டில் நேற்றய தினம் 15 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய கொவிட் தொற்றாளர் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 801 ஆக உயர்வடைந்துள்ளது.
பண்டாரகம, அம்பிட்டிய, கணேமுல்ல, ராகம, குளியாப்பிட்டி, பிபிலை, கல்கிரியாகம, பசறை, வஸ்கடுவ, நேபொட, போம்புவல, நாவுன்துடுவ, கொழும்பு 7 மற்றும் மடுல்கலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு மரணித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 10 பேர் பெண்கள் எனவும் மற்றைய 5 பேரும் ஆண்கள் என்றும் அரச தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.