தடுப்பூசி செலுத்தப்படாவிடின் பேருந்து சேவைகளை இடைநிறுத்துவோம்; தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் (காணொளி)
பேருந்து உரிமையாளர்கள் மற்றும் சேவையாளர்களுக்கு அடுத்த வாரத்திற்குள் கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்படாவிட்டால் தமது பேருந்து சேவையினை இடைநிறுத்தவுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன இதனை தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு தமது சங்கத்தினால் கடிதம் ஒன்றும் அனுப்பிவைக்கப்பட்டிருந்ததாகவும், அதற்கு இதுவரையில் எந்தவொரு பதிலும் வழங்கப்படவில்லை என்றும் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.
இதற்கான தீர்வினை உடனடியாக வழங்காவிட்டால் தனியார் பேருந்து சேவையினை இடைநிறுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.