நேற்றும் கொழும்பில் அதிகளவான தொற்றாளர்கள் பதிவு!

நேற்றும் கொழும்பில் அதிகளவான தொற்றாளர்கள் பதிவு!

நாட்டில் கொவிட்-19 தொற்று உறுதியானவர்களில் அதிகளவானோர் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் மாத்திரம் நேற்றைய தினம் 411 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக நாரஹேன்பிட்டி பகுதியில் மாத்திரம் நேற்றைய தினம் 60 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதற்கு அடுத்தப்படியாக பிலியந்தலையில் 43 பேருக்கும், மொரட்டுவையில் 31 பேருக்கும், கல்கிஸ்ஸை, மிரிஹான பகுதிகளில் தலா 21 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் நேற்றைய தினம் 347 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதுடன் அதிகளவானோர் வத்தளை பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வத்தளையில் நேற்று 64 பேருக்கு தொற்றுறுதியானதுடன், கட்டானை பகுதியில் 61 பேருக்கும், நீர்கொழும்பில் 41 பேருக்கும், மினுவங்கொடையில் 35 பேருக்கும், கட்டுநாயக்கவில் 20 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

கம்பஹா மாவட்டத்திற்கு அடுத்தப்படியாக களுத்துறை மாவட்டத்தில் நேற்றைய தினம் 358 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் பாணந்துறை தெற்கு பகுதியில் மாத்திரம் 88 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதுடன், பாணந்துறை வடக்கில் 66 பேருக்கும், களுத்துறை வடக்கில் 25 பேருக்கும், ஹொரணையில் 22 பேருக்கும், இங்கிரிய பகுதியில் 20 பேருக்கும் கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.

காலி மாவட்டத்தில் 188 பேரும், இரத்தினபுரியில் 172 பேரும், குருநாகலையில் 75 பேரும், கண்டியில் 70 பேரும், நுவரெலியாவில் 45 பேரும், மாத்தளையில் 32 பேரும் அம்பாறையில் 25 பேரும், திருகோணமலையில் 19 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.