5000 லீற்றர் எதனோல் அடங்கிய பாரவூர்தி காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது!
போலியான ஆவணங்களை தயார் செய்து 5000 லீற்றர் எதனோல் அடங்கிய 25 கொள்கலன்களை ஏற்றிச் சென்ற பாரவூர்தியொன்று தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கசாகல பிரதேசத்தில் வைத்து காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
நேற்று (08) மாலை 2.30 மணியளவில் அங்குனுகொலபெலஸ்ஸ நுழைவாயிலில் அதிவேக நெடுஞ்சாலைக்குள் பிரவேசித்த வாகனமொன்றின் மீது சந்தேகம் ஏற்பட்டதால் அதனைப் பின் தொடர்ந்து பரிசோதித்த போது எதனோல் அடங்கிய 25 கொள்கலன்கள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.