பிரதமர் - கட்சித் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு நாளை மறுதினம்
அண்மையில் இடம்பெற்ற ஆளும்தரப்பின் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்ற கட்சிகளின் தலைவர்களுக்கும், பிரதமருக்கும் இடையிலான விசேட பேச்சுவார்த்தை ஒன்று நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது.
அலரிமாளிகையில் நாளை மறுதினம் மாலை 6 மணிக்கு இந்த பேச்சுவார்த்தை இடம்பெற உள்ளதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் அமைச்சர் உதய கம்மன்பில எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.
இதற்கு முன்னர் பிரதமர் தலைமையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், கட்சி தலைவர்களுக்கு மேலதிகமாக, மேலும் பலர் பங்கேற்றிருந்தமையால், கட்சித் தலைவர்கள் அந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருக்கவில்லை.
இந்த நிலையில், அவர்கள் பிரதமரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய நாளை மறுதினம் இந்த பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.