21 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்

21 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்

நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் 21 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதனை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இரத்தினபுரி மாவட்டத்தில் ரக்வானை காவல்துறை அதிகார பிரிவில் தொலேகந்த, ரம்புக்க, கத்லான, தனபெல, இழும்பகந்த, பொத்துபிட்டி தெற்கு கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கலவானை காவல்துறை அதிகார பிரிவில் பனாபொல, குடுமிட்டிய, குடவ, தெல்கொடை கிழக்கு, மேற்கு, தவ்கலகம, தண்டகமுவ, கொஸ்வத்தை, தப்பஸ்ஸரகந்த, வதுராவ, வெம்பியகொடை, தவுகலகம, வெத்தாகல கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், கலவானை மேற்கு கிராம சேவகர் பிரிவில் பிரதான நகரிலிருந்து கிழக்கு தொலஹேன சந்தி வரையான வீதியின் இரண்டு புறங்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதுதவிர, நுவரெலியா மாவட்டத்தில் லிந்துலை காவல்துறை அதிகார பிரிவில் சென் கூம்ஸ் தோட்டமும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை களுத்துறை மாவட்டத்தின் பாணந்துறை தெற்கு காவல்துறை அதிகார பிரிவில் நாரம்பிட்டிய கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.