திருமலை மாவட்டத்தில் இதுவரை கொவிட் தொற்றினால் 18 பேர் மரணம்!

திருமலை மாவட்டத்தில் இதுவரை கொவிட் தொற்றினால் 18 பேர் மரணம்!

திருகோணமலை மாவட்டத்தில் இதுவரை 18 பேர் கொவிட்-19 தொற்றால் மரணித்தனர்.

அதில் அதிகளவான மரணங்கள் திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சம்பவித்துள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 7 மரணங்களும், உப்புவெளி பகுதியில் ஆறு மரணங்களும், மூதூர் மற்றும் கந்தளாய் ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா இரண்டு மரணங்களும், கிண்ணியாவில் ஒரு மரணமும் சம்பவித்துள்ளதாக அந்த அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.