ஸ்வர்ணமஹால் வைப்பீட்டாளர்களுக்கு மேலதிக இழப்பீடு!
ஸ்வர்ணமஹால் வைப்பீட்டாளர்களுக்கு மேலதிக இழப்பீடு வழங்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
ஸ்வர்ணமஹால் பினான்ஸ் சர்விஸ் (பீஎல்சி) நிறுவனத்தின் தகுதியான வைப்பீட்டாளர்களுக்கு இலங்கை வைப்பீட்டுக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை உதவித் திட்டத்தின் கீழ் இந்த மேலதிக இழப்பீட்டுக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அதற்கமைய இந்த இழப்பீடு வழங்கும் செயற்பாடுகள் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.