திருகோணமலையில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்து
திருகோணமலை மாவட்டத்தின் அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்கு உள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயம் அடைந்த நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்துச் சம்பவம் இன்று (08) காலை 6.00 மணி அளவில் அக்போபுர 87 ஆம் கட்டை சந்தியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த விபத்தில் 36 வயதுடைய ஒருவரே படுகாயம் அடைந்துள்ளார்.
ஹபரணையில் இருந்து கந்தளாய் பகுதிக்குச் மோட்டார் சைக்கிளில் சென்றவர் திருகோணமலையில் இருந்து தம்புள்ளைக்கு சீமெந்து ஏற்றிச் சென்ற வாகனத்தின் மீது வேகமாக சென்று நேருக்கு நேர் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சீமெந்து லொறியின் சாரதியை பொலிஸார் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்போபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.