இரண்டு பேரின் உயிரை காவுகொண்ட வீதி விபத்து!

இரண்டு பேரின் உயிரை காவுகொண்ட வீதி விபத்து!

மட்டக்களப்பு, வாழைச்சேனை -கொழும்பு பிரதான வீதியில் மியான்குளம் பகுதியில் இடம்பெற்ற மகிழுந்து விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

குறித்த பகுதியில் பயணித்த மகிழுந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி நேற்றிரவு விபத்துக்குள்ளானதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

விபத்தில் மகிழுந்தில் பயணித்த 31 வயதுடைய ஆண், பெண் இருவரும் உயிரிழந்தனர்.

சம்வம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.