
வவுனியாவில் முகக்கவசம் அணியாத 30க்கும் மேற்பட்டோர் கைது!
வவுனியா நகரப்பகுதியில் முகக்கவசம் அணியாமல் பயணித்த 30 பேருக்கும் மேற்பட்டோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
வவுனியா தலைமையக காவல் நிலைய அதிகாரிகளால் இன்றைய தினம் குறித்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது வவுனியா நகரில் முகக்கவசம் அணியாமல் பயணித்த 30 பேருக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு வாகனங்களில் ஏற்றிச்செல்லப்பட்டதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், சுகாதார வழிகாட்டல்களை இறுக்கமாக பின்பற்றாதவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.