சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பெரியவெங்காய விதை மற்றும் உலர் மஞ்சள் தொகையுடன் இருவர் கைது!

சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பெரியவெங்காய விதை மற்றும் உலர் மஞ்சள் தொகையுடன் இருவர் கைது!

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பெரியவெங்காய விதை  மற்றும் உலர் மஞ்சள் தொகையுடன் இரண்டு பேர் நீர்கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து பெரிவெங்காய விதைகள் அடங்கிய  27 மூட்டைகளும் உலர் மஞ்சள் அடங்கிய 15 மூட்டைகளும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இவ்வாறு பொருட்களை சட்டவிராதமாக கொண்டு வருவதற்கு பயன்படுத்தப்பட்ட கப்பல்களும் கடற்படையினரால் மீட்கப்பட்டதாக கடற்படை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.