இலங்கையில் எகிறுகிறது கொவிட் பலி!!

இலங்கையில் எகிறுகிறது கொவிட் பலி!!

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 14 பேர் நேற்றையதினம்(05) உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 734 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை நேற்றைய தினத்தில் மாத்திரம் 1,897 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.