
திருமலை உட்பட 2 மாவட்டங்களின் 2 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்
நுவரெலியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களில், இரண்டு கிராம சேவகர் பிரிவுகள் இன்று (06) காலை முதல்
தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்.
இதற்கமைய, நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை காவல்துறை அதிகார பிரிவின் பனங்கம்மன கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில், திருகோணமலை காவல்துறை அதிகார பிரிவில், சுபத்ராலங்கா மாவத்தை கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்