கொழும்பில் நிரந்தரமாக வசிப்பவர்கள் கொவிட்டால் அதிகம் பாதிக்கப்படுகிறார்களா? வெளியான புதிய தகவல்

கொழும்பில் நிரந்தரமாக வசிப்பவர்கள் கொவிட்டால் அதிகம் பாதிக்கப்படுகிறார்களா? வெளியான புதிய தகவல்

கொழும்பில் நிரந்தரமாக தங்கியுள்ளவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள்அல்லவென கொழும்பு பிரதேச தொற்று நோய் தடுப்பு விசேட வைத்தியர் தினுகா குருகே தெரிவித்துள்ளார்.

மாறாக கொழும்பு நகரில் பதிவாகின்ற கொவிட் தொற்றாளர்களில் அதிகளவானோர் கொழும்பு நகரில் கடமையாற்றுவோர் என அவர் மேலும் தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு நகரில் 4 வீதமான கொவிட் தொற்றாளர்களே அடையாளம் காணப்படுவதாக கொழும்பு மாநகர சுகாதார வைத்திய அதிகாரி ருவன் விஜேமுனி தெரிவித்தார்.

கொவிட் 2வது அலை ஏற்பட்ட கடந்த ஒக்டோபர் மாதத்தின், கொவிட் வைரஸ் காட்டுத் தீயை போல பரவியதாகவும், இந்த முறை அவ்வாறு பரவவில்லை எனவும் அவர் கூறினார். கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டமையே, அதற்கான காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொழும்பில் நிரந்தரமாக தங்கியிருக்காத, ஆனால் கொழும்பில் வேலை செய்கின்றவர்களே, கொவிட் தொற்றுக்கு இலக்காவதாக டொக்டர் தினுகா குருகே குறிப்பிட்டார்.

அத்துடன், கொழும்பு நகரிலுள்ள நிறுவனங்களில் சிறிய கொவிட் கொத்தணிகள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.