
திருகோணமலை பிரதேச செயலகம் மூடப்பட்டது
கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டதைத் தொடர்ந்து திருகோணமலை பிரதேச செயலகத்தை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அலுவலகத்தின் நிர்வாக அதிகாரி உட்பட ஐந்து ஊழியர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகளின் பிராந்திய பணிப்பாளர் டொக்டர் டிஜிஎம் கோஸ்டா தெரிவித்தார்.
இதன் காரணமாக திருகோணமலை பிரதேச செயலகம் மூடப்பட்டுள்ளது. பிரதேச செயலாளர் திருகோணமலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், நிர்வாக அதிகாரி கிண்ணியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.