
பேருவளை போதைப்பொருள் சந்தேகநபருக்கு வழங்கப்பட்ட பிணைக்கு எதிராக தடையுத்தரவு!
இலங்கையில் இதுவரையில் கைப்பற்றப்பட்ட பெருந்தொகையான போதைப்பொருளுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட பிணை உத்தரவுக்கு எதிராக, கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் சட்ட மா அதிபரால் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.
பேருவளையை அண்மித்த கடற்பகுதியில் 2020 பெப்ரவரி 21ஆம் திகதி படகொன்றிலிருந்து 437 கிலோ ஹெரோயின் மற்றும் 310 கிலோ ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட சம்பவத்தின் 31 ஆவது சந்தேகநபருக்கு வழங்கப்பட்ட பிணை உத்தரவுக்கு எதிராகவே இந்த தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.