ரிஷாட் எம்.பி நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்பதில் எவ்வித சட்ட சிக்கல்களும் இல்லை – சட்ட மா அதிபர்
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதில் எவ்வித சட்ட சிக்கல்களும் இல்லை என சட்ட மா அதிபர் அறிவித்துள்ளார்.
குற்றப்புலனாய்வு திணைக்களப் பணிப்பாளரின் கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் சட்ட மா அதிபர் இந்த அறிவிப்பை மேற்கொண்டதாக சட்ட மா அதிபரின் இணைப்பதிகாரி தெரிவித்தார்.
இதேவேளை, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
ரிஷாட் பதியுதீனால் கோரிக்கையொன்று முன்வைக்கப்படுமானால், நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கு அவருக்கு வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்குமாறு அண்மையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளருக்கு, நாடாளுமன்ற படைக்கல சேவிதர் எழுத்துமூலம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.