மஹிந்த தலைமையில் ஆளும் கட்சியின் கூட்டம்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்றைய தினம் ஆளும் கட்சியின் கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.
எனினும் அமைச்சர்களான விமல் வீரவங்ச, உதய கம்மன்பில மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் அதில் பங்கேற்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக இடம்பெற்றிருந்த ஆளும் கட்சியின் கூட்டத்திலும் அவர்கள் கலந்து கொண்டிருக்கவில்லை.
எவ்வாறெனினும் நேற்று இடம்பெற்ற ஆளும் கட்சியின் கூட்டத்தில் மாகாண சபை தேர்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் தேர்தலை நடத்தாமல் இருக்கலாம் என குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த பெரும்பாலானோர் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அதேநேரம் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான ஏனைய நடவடிக்கைகளை மேற்கொண்டு நிறைவுறுத்த இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.