நிறுவனங்கள் மூடப்படுமாயின் சேவை முடிவுறுத்தல் சட்டத்தின் கீழ் இழப்பீடு பெற முடியும் - நிமல் சிறிபால டி சில்வா
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்போதைய நிலையால் நிறுவனம் ஒன்றை முடுவதற்கு நேரிடுமானால் சேவையை முடிவுறுத்தல் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு இழப்பீட்டை பெற்றுக்கொள்ள முடியும் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
தொழில் அமைச்சில் நேற்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக தற்போது 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் இழக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கொவிட்-19 பரவல் காரணமாக பணிக்கு திரும்ப முடியாமல் வீடுகளில் உள்ளவர்களுக்கு அவர்களது வேதனத்தில் பாதியளவை செலுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டது.
இதற்கமைய அவ்வாறானவர்களுக்கு வேதனத்தில் பாதியளவு செலுத்தப்படுகின்றது.
பணிகளுக்கு திரும்பியவர்களுக்கு முழுமையான வேதனம் வழங்கப்படுவதாகவும் தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.