வருமான வரிவிலக்களிப்பு தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்!
வர்த்தக வங்கிகளினால் வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ளமையினால் சிரேஷ்ட பிரஜைகளின் நிலையான வைப்புக்களுக்கான வட்டி வீதங்களும் குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
சிரேஷ்ட பிரஜைகளின் வட்டி இலாபத்திற்காக அவர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ள வருமான வரி விலக்களிப்பில் எந்தவொரு மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.
சிரேஷ்ட பிரஜைகளின் நிலையான வைப்பு கணக்கு தொடர்பில் வணிக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் இதுவரை நூற்றுக்கு 9 முதல் 11 வீத வட்டி வழங்கியதோடு தற்போது 7 முதல் 8 வீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரஜைகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.