போலியான காசோலைகளை பயன்படுத்தி பணமோசடியில் ஈடுபட்ட நால்வர் கைது

போலியான காசோலைகளை பயன்படுத்தி பணமோசடியில் ஈடுபட்ட நால்வர் கைது

பிரசித்தி பெற்ற இரும்பு தொழிற்சாலையொன்றிற்கு சொந்தமான தனியார் வங்கிக் கணக்கொன்றிலிருந்து போலியான காசோலைகளை வழங்கி 43 மில்லியன் ரூபா பணத்தை பெற்றுக் கொண்ட, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குழுவொன்றின் 4 அங்கத்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.