பாதாள உலக குழுவினருக்கு போதைப்பொருட்களை விற்ற அதிகாரிகள்!

பாதாள உலக குழுவினருக்கு போதைப்பொருட்களை விற்ற அதிகாரிகள்!

பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பணியகத்தின் 12 அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் ஹெரோயின் போதைப் பொருளை தவிர ஐஸ் போதைப் பொருள் மற்றும் நவீன ரக கைத்துப்பாக்கிகளையும் பாதாள உலகக்குழுவினருக்கு வழங்கியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

பலப்பிட்டிய பிரதேசத்தில் பாதுகாப்பு இல்லம் ஒன்றில் போதைப் பொருளுடன் மறைத்து வைக்கப்பட்டிருந்த, 5 கைத்துப்பாக்கிகளை கொழும்புக்கு எடுத்து வந்து, அதில் மூன்று துப்பாக்கிகளை கொட்டாவே ராஜித அல்லது லொகு என அழைக்கப்படும் படோவிட்ட பிரதேசத்தை சேர்ந்த போதைப் பொருள் வியாபாரிக்கு வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது சம்பந்தமான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் 20 கிலோ கிராம் ஐஸ் போதைப் பொருளை விற்பனை செய்துள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவர்கள் பாதாள உலகக்குழுவினருக்கு கைத்துப்பாக்கிகளை வழங்கியிருந்தமை தொடர்பாகவும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பாக தற்போது தேடப்பட்டு வரும் பொலிஸ் பரிசோதகர் தப்பிச் செல்லும் போது துப்பாக்கிகளில் ஒன்றை கைவிட்டுச் சென்ற நிலையில் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பணியகத்தின் அதிகாரிகள் விற்பனை செய்துள்ள போதைப் பொருள் தொகை, நடு கடலுக்கு சென்று போதைப் பொருளை கைப்பற்றி எடுத்து வந்தமை, அதனை கடத்தி வந்த ஈரானிய படகில் இருந்த நபர்களை கைது செய்யாமை, கைப்பற்றிய போதைப் பொருளை தெற்கில் உள்ள வீடொன்றில் மறைத்து வைத்திருந்தமை தொடர்பாகவும் விசாரணைகளை நடத்துமாறு பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

மேலும் கடற்படையினர் கைப்பற்றி எடுத்து வந்த ஐஸ் போதைப் பொருளை, வழக்கு பொருட்களை வைக்கும் களஞ்சியத்தில் வைக்குமாறு ஒப்படைத்துள்ளனர். அதில் மேலதிகமாக இருந்த 20 கிலோ கிராம் ஐஸ் போதைப் பொருளையே சந்தேக நபர்கள் விற்பனை செய்துள்ளனர்.

கடற்படையினர் தமது தராசுகளில் நிறுத்து கணக்கிட்ட தொகையைவிட 20 கிலோ கிராம் அதிகமாக இருப்பது போதைப் பொருள் தடுப்பு பணியகத்தின் களஞ்சியத்தில் நிறுக்கும் போது தெரியவந்துள்ளது. சந்தேக நபர்கள் மேலதிகமாக இருந்த தொகையை விற்பனை செய்துள்ளனர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.