ஏப்ரல் 21 தாக்குதல்- ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கிய சம்பிக்க ரணவக்க
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காவல்துறை பிரிவில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை முன்னிலையாகியிருந்தார்.
கொழும்பு - பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள குறித்த பிரிவில் சுமார் 2 மணித்தியாலங்கள் அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், அடிப்படைவாத பயங்கரவாத நடவடிக்கைகளுடன் சில அரசியல்வாதிகளும், வியாபாரிகளும் தொடர்புபட்டிருப்பதாகவும், அவர்கள் தொடர்பில் இந்த ஆணைக்குழு அரசியல் அழுத்தங்களுக்கு அப்பால் சென்று விசாரணைகளை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.