இரண்டு மாநில எல்லைகளை மூடிய அவுஸ்திரேலியா

இரண்டு மாநில எல்லைகளை மூடிய அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவின் அதிக சனத்தொகை கொண்ட இரண்டு மாநிலங்களான விக்டோரியா மற்றும் நியுசவுத்வேல்ஸ் ஆகியனவற்றின் எல்லைகளை மூடுவதற்கு அந்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கடந்த சில நாட்களாக மெல்பர்னில் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தினை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அங்கு அதிகளவான பொதுமக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

\

அமெரிக்காவில் மாத்திரம் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 29 இலட்சத்து 82 ஆயிரத்து 928 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் அங்கு ஒரு இலட்சத்து 32 ஆயிரத்து 569 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, சர்வதேச ரீதியில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த  எண்ணிக்கை ஒரு கோடியே 15 லட்சத்து 62 ஆயிரத்து 878 ஆக அதிகரித்துள்ளது.

சர்வதேச ரீதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 36 ஆயிரத்து 841 ஆக அதிகரித்துள்ளது.

எவ்வாறாயினும் கொவிட்-19 தொற்றுறுதியான 65 லட்சத்து 37 ஆயிரத்து 765 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.