மத்திய வங்கியிடமிருந்து மற்றுமொரு மகிழ்ச்சியான செய்தி

மத்திய வங்கியிடமிருந்து மற்றுமொரு மகிழ்ச்சியான செய்தி

கொவிட்-19 இனால் பாதிக்கப்பட்ட 20 ஆயிரத்து 240 வியாபாரங்களுக்கு 53 பில்லியன் ரூபாவுக்கான கடன் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

நாட்டில் பொருளாதார நடவடிக்கை மேம்படுத்தும் நோக்கில் 4 சதவீத வட்டி வீதத்தில் இந்த கடன் திட்டம் வழங்கப்படவுள்ளது.

இந்தக் கடன் திட்டமானது சுயதொழில் மற்றும் தனிப்பட்டவர்கள் உள்ளடங்கலாக மூலம் பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கு கிடைக்கப்பெறவுள்ளது.

சுற்றுலா, ஏற்றுமதிகள் மற்றும் தொடர்புபட்ட ஏற்பாட்டுச் சேவை வழங்குதல் போன்றவற்றில் ஈடுபட்டுள்ள வியாபாரங்களுக்கு ஏற்புடையதாகாது என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.