கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்
கொரோனா வைரஸ் தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 2 கடற்படையினர் இன்று குணமடைந்துள்ளனர். கடற்படை பேச்சாளர் லெப்டினன் கொமன்டர் இசுறு சூரியபண்டார இதனை தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, கொரோனா தொற்று பீடிக்கப்பட்டிருந்த நிலையில் குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 885 ஆக அதிகரித்துள்ளது.
அதேநேரம், 19 பேர் தொடர்ந்தும் நாட்டின் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, நாட்டில் இதுவரை 2 ஆயிரத்து 76 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.
அவர்களில் ஆயிரத்து 909 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளதுடன் 162 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, கொட்டாஞ்சேனை - ஜிந்துப்பிட்டி பகுதியில் இருந்து தனிமைப்படுத்தலுக்காக கந்தக்காடு தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த 154 பேரும் மீண்டும் தங்களது வீடுகளுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
எனினும் சுகாதார ஆலோசனைகளுக்கு அமைவாக தொடர்ந்தும் செயற்பட வேண்டும் என கொழும்பு மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.