விமானப் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள தீர்வையற்ற வர்த்தக நிலையங்கள் இன்று தொடக்கம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 9ஆம் திகதி முதல் மே மாதம் 31ஆம் திகதி வரை நாட்டுக்கு வந்த பயணிகளுக்காக மாத்திரம் குறித்த கட்டிடத் தொகுதிகள் திறக்கப்பட்டிருந்ததாக விமான நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இவ்வாறு பொருட்களை கொள்வனவு செய்ய வருகைத்தருவோர் கடவுச்சீட்டுடன் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தினால் வழங்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சான்றிதலின் பிரதியொன்றும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியதை உறுதி செய்யும் வகையில் பொது சுகாதார ஆய்வாளர்களின் சான்றிதல் ஒன்றையும் எடுத்து வருவது கட்டாயமாகுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கொரோனா காரணமாக கடந்த 9ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலைய தீர்வையற்ற வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. கட்டுநாயக்க விமான நிலையத்தின் வெளியேறும் முனையத்திற்கு ஒரு பயணியுடன் 5 பேருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.