நூறு அடி பள்ளத்தில் குடைசாய்ந்த பாரவூர்தி!

நூறு அடி பள்ளத்தில் குடைசாய்ந்த பாரவூர்தி!

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா ராதாலை கார்லிபேக் பகுதியில் 100அடிபள்ளத்தில் பாராஊர்தி ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

பார ஊர்தியின் சாரதி மற்றும் நடத்துனர் காயங்களுக்குளாகிய நிலையில், நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று காலை 10மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர் .

இச்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

பொலனறுவையில் இருந்து நுவரெலியா பகுதிக்கு அரிசி ஏற்றிவந்த பார ஊர்தி அரிசியினை நுவரெலியாவில் இறக்கிவிட்டு நல்லதன்னி பகுதிக்கு வரும்போது ரதாலை குறுக்கு வீதி பகுதியில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த பார ஊர்திகள் நுவரெலியாவில் இருந்து டெஸ்போட் கிரிமிட்டி வழியாக பயணிக்க வேண்டும் ஆனால், அந்த வீதியில் அமைந்துள்ள பாலம் கடந்த இரண்டு வருடகாலமாக புணரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றமையால் குறித்த வீதியின் போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது.

ஆகவே இந்த குறுக்கு வீதியின் ஊடாக இது போன்ற பார ஊர்திகள் பயணிக்ககூடிய நிலமை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டபடுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.