115 நாட்களுக்கு பின் பாடசாலைகளுக்கு சென்ற மாணவர்கள் (படங்கள்)

115 நாட்களுக்கு பின் பாடசாலைகளுக்கு சென்ற மாணவர்கள் (படங்கள்)

கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்து பாடசாலைகளும் 115 நாட்களுக்கு பின்னர் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

மூடப்பட்டிருந்த அனைத்து பாடசாலைகளும் 4 கட்டங்களின் கீழ் திறக்கப்படுகின்றன. அந்த வகையில் இன்றைய தினம் இரண்டாம் கட்டத்திற்கு அமைவாக பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய, தரம் 11, 13 மற்றும் 5 ஆம் தரங்களுக்கு இன்றைய தினம் காலை பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு மாணவர்களின் வருகையில் பூரணமின்மை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

11 மற்றும் 13 ஆம் தரங்களுக்கு காலை 7.30 மணிமுதல் பிற்பகல் 3.30 மணிவரையும் ஐந்தாம் தர மாணவர்களுக்கு முற்பகல் 7.30 முதல் பிற்பகல் 1.30 வரையிலும் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


மேலும் அனைத்து பாடசாலைகளிலும் கைகளை கழுவுவதற்ககான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு உடல் வெப்பநிலையை அறிந்துக்கொள்வதற்கான சோதனை நடவடிக்கைகளும் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பாடசாலைகளுக்கு வருகை தரும் மாணவர்கள் முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பேணுதல் ஆகியன ஆசிரியர்களால் அவதானிக்கப்பட்டு வருவதாகவும் எமது பிராந்திய செய்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.