பொதுத்தேர்தலின் பின்னர் அரசசார்பற்ற நிறுவனங்கள் மீது மஹிந்த எடுக்கவுள்ள நடவடிக்கை!
பொதுத் தேர்தலுக்கு பின்னர் அமைக்கப்படும் புதிய அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் அரசசார்பற்ற நிறுவனங்கள் சம்பந்தமாக விசேட விசாரணைகளை ஆரம்பிக்க போவதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை சூரியவெவ பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு வெளிநாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளிடம் இருந்து நிதி கிடைக்கும் விதம் தொடர்பாக கண்காணிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசசார்பற்ற அமைப்புகளுக்கு எப்படி நிதி கிடைக்கின்றது, அந்த பணம் எதற்காக செலவிடப்படுகிறது என்பதை அரசாங்கம் அறிந்துகொள்ள வேண்டும்.
சில அரசசார்பற்ற அமைப்புகளுக்கு கிடைக்கும் வெளிநாட்டு நிதி, அரசாங்கத்திற்கு எதிராகவும் நாட்டுக்கு எதிராக பல்வேறு சூழ்ச்சிகளை நடைமுறைப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது.
இதனால், அவற்றுக்கு வேலிகளை அமைக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை எனவும் பிரதமர் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.