ரம்புட்டான் பழத்தால் பறிபோன குழந்தை: சோகத்தில் மூழ்கிய குடும்பம்!

ரம்புட்டான் பழத்தால் பறிபோன குழந்தை: சோகத்தில் மூழ்கிய குடும்பம்!

மாத்தறையில் ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கி குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

மாத்தறை மாவட்டத்தின் தெனியாய பகுதியில் 11 மாதங்களே ஆன குழந்தை ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது.

எனினும் குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்து விட்டது.

வைத்தியர்களின் கவனக்குறைவே குழந்தையின் மரணத்துக்கு காரணமென குழந்தையின் உறவினர்கள் வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவை அடித்து நொறுக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில் தெனியாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.