நடுவானில் வைத்தே முறியடிக்கப்பட்ட ரொக்கெட் தாக்குதல்!
ஈராக்கின் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட ரொக்கெட் தாக்குதல் நடுவானில் வைத்து முறியடிக்கப்பட்டுள்ளது.
பாக்தாத்தில் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தூதரக வலயம் அமைந்துள்ள “பச்சை வலயம்” எனும் பகுதியை நோக்கி நடத்தப்பட்ட தாக்குதலே இவ்வாறு முறியடிப்புச் செய்யப்பட்டுள்ளது.
ஈரானில் இருந்தே குறித்த ரொக்கெட் ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ள நிலையில்,
அங்கு அமைக்கப்பட்டிருந்த ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு உடனடியாக செயற்பட்டு தூதரகம் நோக்கி வந்த ஏவுகணையை நடுவானில் வைத்து தாக்கி அழித்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.