தேர்தல் பிரசார நடவடிக்கைகள் தொடர்பில் வேட்பாளர்கள் மீது பாயும் கபே அமைப்பு

தேர்தல் பிரசார நடவடிக்கைகள் தொடர்பில் வேட்பாளர்கள் மீது பாயும் கபே அமைப்பு

அரசியல் கட்சிகள், சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாமல் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாக கபே அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மக்கீன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் முகமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகளில் ஒன்றான ஒரு மீற்றர் சமூக இடைவெளியை பின்பற்றாமல் தான், பெரும்பாலான அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றன.

கொரோனா வைரஸ் பரவல் ஓரளவு நாட்டில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட போதிலும் பொதுமக்களின் கவனமின்மை காரணமாக மீண்டும் பரவக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது.

மேலும் மக்களின் பாதுகாப்பை கவனத்தில் கொள்ளாமல் தேர்தல் வெற்றியை மாத்திரம் கவனத்தில் கொண்டு செயற்படும் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பின் போது மக்கள் உரிய பதிலை வழங்க வேண்டும்” என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.