மொட்டுக் கட்சியினரும் வங்கிக் கொள்ளையர்களும் ஓரணியில் இணைந்துள்ளனர்- சஜித்
மொட்டுக் கட்சியினரும் வங்கிக் கொள்ளையர்களும் ஓரணியில் இணைந்துள்ளார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கடுவலை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த மக்கள் சந்திப்பில் சஜித் பிரேமதாச மேலும் கூறியுள்ளதாவது, “மக்களுக்கு இந்த அரசாங்கம் தொடர்பாக தற்போது அச்சமான உணர்வொன்று ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் குறிப்பிட்ட எதையும் நிறைவேற்றாத, செயற்றிறன் அற்ற ஓர் அரசாங்கமே இருக்கிறது.
மனிதாபிமானம் இல்லாத, மக்களை ஏமாற்றி வரும் அரசாங்கமே இன்று நாட்டை ஆட்சி செய்து வருகிறது.
கொரோனா காலத்தில் கூட, மக்களுக்கு இந்த அரசாங்கம் முறையான நிவாரணங்களை வழங்கவில்லை.
நாம் பத்திரிகை செய்திகளுக்காக உறுதி அளிப்பவர்கள் அல்ல. நாம் கூறினால், அதனை நிச்சயமாக நிறைவேற்றுவோம்.
இன்று நாட்டில் மொட்டுக் கட்சியினரும், மத்திய வங்கிக் கொள்கையர்களும் இணைந்து என் மீது சேறு பூசும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
எமது வேலைத்திட்டங்களை பார்த்து அஞ்சியே இவ்வாறான விமர்சனங்கள் வருகின்றன. நாம் இவற்றை பார்த்து என்றும் தயங்கப் போவதில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.