பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிராக மூன்றாவது முறையாக பவர்பிளேயில் குறைந்த ரன்கள் அடித்து மோசமான சாதனைக்குள்ளாகியது மும்பை இந்தியன்ஸ்.
மும்பை இந்தியன்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 17-வது ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. ஆடுகளம் மிகவும் மந்தமாக இருப்பதால் பேட்ஸ்மேன்கள் ரன்கள் அடிப்பதற்கு திண்டாடி வருகின்றனர்.
புதுப்பந்தில் முதல் 6 ஓவரில் ரன்கள் அடித்ததால்தான் உண்டு. இல்லையெனில் கஷ்டப்பட வேண்டியநிலை ஏற்படும். இன்று மும்பை இந்தியன்ஸ் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்தது. பஞ்சாப் அணியின் பந்து வீச்சை மும்பை இந்தியன்ஸ் பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்ள திணறினார்கள்.

டி காக் 5 பந்தில் 3 ரன்கள் மட்டுமே அடித்தார். அடுத்து வந்த இஷான் கிஷன் ஆமை வேகத்தில் விளையாடினார். ரோகித் சர்மாவினாலும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. இதனால் பவர் பிளே-யான முதல் 6 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 21 ரன்கள் மட்டுமே எடுத்தது. ரோகித் சர்மா 16 பந்தில் 13 ரன்கள் எடுத்தார். இஷான் கிஷன் 15 பந்தில் 5 ரன்கள் எடுத்தார்.
இந்த சீசனில் பவர் பிளேயில் குறைந்த ஸ்கோர் இதுவாகும். மேலும், ஒட்டுமொத்த ஐபிஎல் வரலாற்றில் 4-வது மிகக்குறைந்த ஸ்கோர் ஆகும். இதில் மூன்று முறை பஞ்சாப் அணிக்கெதிராக எடுத்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் குறைந்த ஸ்கோர் விவரம் வருமாறு:-
|
வ.எண் |
எதிரணி |
ரன்/விக்கெட் |
மைதானம் |
வருடம் |
|
1 |
பஞ்சாப் |
17/3 |
வான்கடே |
2015 |
|
2 |
பஞ்சாப் |
21/2 |
வி.பட்டனம் |
2016 |
|
3 |
ஆர்சிபி |
21/4 |
பெங்களூரு |
2017 |
|
4 |
பஞ்சாப் |
21/1 |
சென்னை |
2021 (இன்று) |