ஜிந்துபிடிய பகுதியில் உள்ள 154 பேரின் PCR பரிசோதனை முடிவுகள் வெளியானது..!

ஜிந்துபிடிய பகுதியில் உள்ள 154 பேரின் PCR பரிசோதனை முடிவுகள் வெளியானது..!

நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியாகியிருந்த மேலும் 18 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

 

இதற்காமை கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 903 ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

 

அத்துடன் 160 நோயாளர்கள் நாட்டில் உள்ள பல வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

நாட்டில் இதுவரை 2 ஆயிரத்து 704 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

இதேவேளை, கொட்டாஞ்சேனை ஜிந்துப்பிட்டி பகுதியில் கொரோனா தொற்றுறுதியான ஒருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்த 154 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

கொழும்பு மாநகர சபையின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் டபுள்யு கே. சந்தரபால இதனை குறிப்பிட்டுள்ளார்.

 

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகள் மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

எனினும் அவர்கள் மேலும் இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்படவுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் டபுள்யு கே. சந்தரபால குறிப்பிட்டுள்ளார்.