கூட்டமைப்பினதோ அல்லது வேறு கட்சிகளினதோ ஆதரவு எமக்கு தேவையில்லை! பிகிரங்கமாக தெரிவித்த ரணில்
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி செல்வார்கள் என்றால், அவர்கள் முட்டாள்களாக இருப்பார்கள் என முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச தெரிவித்திருந்ததாக அந்த கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சிங்கள இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை தெரிவிள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
கட்சியில் இருந்து விலகி வேறு கட்சியை ஆரம்பித்தாலும் ஆரம்பிக்காவிட்டாலும் அது பற்றி பேசுவதில் பயனில்லை. இதற்கு முன்னர் ஒரு அணியினர் கட்சியில் இருந்து விலகிச் சென்றனர், எனினும் அவர்கள் மீண்டும் கட்சியில் இணைய நேரிட்டது.
அவ்வாறான எந்த சந்தர்ப்பத்திலும் கட்சிக்கு பாதிப்பு ஏற்படவில்லை. இதனால், கட்சியில் இருந்து விலகிச் சென்றவர்கள் தொடர்பில் பிரச்சினைகள் இல்லை. தற்போது டி.எஸ். சேனாநாயக்க காலத்தில் இருந்ததை போன்ற தூய்மையான ஐக்கிய தேசியக் கட்சியை உருவாக்க முடியும்.
அதேபோல் எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்லது வேறு கட்சிகளின் ஆதரவு தேவையில்லை. ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளேயே ஏனைய இனப் பிரதிநிதிகளை உருவாக்குவோம் எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.