290 இலங்கையர்களுடன் தரையிறங்கிய விசேட விமானம்...!
பஹ்ரேனில் இருந்து நாடு திரும்ப முடியாமல் சிக்கியிருந்த 290 இலங்கையர்கள் மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல்.202 ரக விமானத்தில் அவர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இன்று காலை 6 மணியளவில் அவர்கள் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்ததாக எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்.
இதுதவிர நேற்றிரவு 11.45 அளவில் டுபாயில் இருந்து வருகை தந்த எமிரேட்ஸ் விமானசேவைக்கு சொந்தமான விமானத்தில் இரண்டு இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
அத்துடன் கட்டாரின் தோஹாவில் இருந்து இன்று அதிகாலை 1.45 அளவில் 15 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
அவர்கள் கட்டார் விமான சேவைக்கு சொந்தமான கியுவ். ஆர் 668 ரக விமானத்தில் நாட்டை வந்தடைந்ததாக கட்டுநாயக்க விமானநிலையத்திற்கான எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
இவ்வாறு நாடு திரும்பியவர்களுக்கு கட்டுநாயக்க விமானநிலையத்தில் பி.சீ.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.