சட்டவிரோத குடியேற்றம் - ஆட்கடத்தலை தடுப்பதற்கு ட்ரோன் கமரா மூலம் கண்காணிப்பு நடவடிக்கை
கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவிற்கு முன்னெடுக்கப்படும் சட்டவிரோத குடியேற்றம் மற்றும் ஆட்கடத்தலை தடுப்பதற்காக ட்ரோன் கமரா தொழில்நுட்பம் மூலம் கண்காணிப்பு நடவடிக்கையினை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக இறையாண்மை எல்லை நடவடிக்கை தொடர்பான ஒன்றிணைந்த செயலணி ஒத்துழைப்பை வழங்க முன்வந்துள்ளதாக இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இணையத்தளம் ஊடாக கடந்த 8ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது நாட்டில் குற்றச்செயல்களை தடுப்பதற்கான ஒத்துழைப்பை வழங்கும் நோக்கில் குறித்த செயலணியும் அவுஸ்திரேலியாவின் காவல்துறையும் இணைந்து இலங்கைக்கு ட்ரோன் கமராக்களை நன்கொடையாக வழங்கியிருந்தன