சிறைச்சாலைகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொலைபேசிகள் மீட்பு!

சிறைச்சாலைகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொலைபேசிகள் மீட்பு!

கடந்த நான்கு வாரங்களில் மாத்திரம் இலங்கையின் 28 சிறைச்சாலைகளில் இருந்து சிறைக்குள் அனுமதிகப்படாத 3000 பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதில் 1102 கைத்தொலைபேசிகள், 688 சிம் அட்டைகள், 283 தொலைபேசி மின்னேற்றிகள், 1310 மின்கலங்கள் என்பன அடங்குகின்றன.

அத்துடன் 116 கிராம் ஹெரோய்ன் போதைப்பொருளும் கைதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

கொழும்பு விளக்கமறியல் சிறை, கொழும்பு மெகசின் சிறை, நீர்கொழும்பு மற்றும் தும்பரை சிறைகளில் இருந்து 77 செவிஒலிக்கருவிகள் கைப்பற்றப்பட்டன.

அத்துடன் 9 ஆயிரத்து 999 ரூபா பணமும் பல்லேகல்ல, பலன்சேன, குருவிட்ட மற்றும் தும்பறை ஆகிய சிறைகளில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.