மாற்றுத்திறனாளி வாக்காளர்களுடன் வரும் நபர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!
2020 ஆகஸ்ட் 5ம் திகதியன்று விசேட தேவையுடையவர்களை வாக்களிக்க அழைத்து வருபவர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் சான்றிதழை எடுத்துவரவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய இதனை தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் விசேட தேவையுடையவர்களை வாக்களிப்புக்காக அழைத்து வருபவர் 18 அகவைக்கு கூடியவராக இருக்கவேண்டும்.
அத்துடன் அவர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாதவராக இருந்தல் அவசியம் என்றும் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அவர் அதிகாரம் மிக்க முகவராக, சுயேட்சைக்குழுவின் தலைவராக, வாக்களிப்பு பிரிவு முகவராக, அரசியல் கட்சிகளின் முகவராக இருந்தல் கூடாது.
இதேவேளை விசேட தேவைக்கொண்டவர்களை வாக்களிப்புக்காக அழைத்து வருபவர்கள் அவர்களுக்கான விண்ணப்பங்களை கிராமசேவையாளரிடம் இருந்து பெற்று நிரப்பப்பட்ட பின்னர் அது அரச மருத்துவர் ஒருவரால் பரீட்சிக்கப்படும் என்றும் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிடடுள்ளார்.