வாகன விபத்துக்களினால் 11 பேர் உயிரிழப்பு

வாகன விபத்துக்களினால் 11 பேர் உயிரிழப்பு

நேற்று (13) இடம்பெற்ற 11 விபத்துக்களில் 8 உந்துருளி சாரதிகள் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக இடம்பெற்ற வாகன விபத்துக்களில் உந்துருளி சாரதிகள் மற்றும் பாதசாரிகள் ஆகியோரே அதிகளவில் மரணமடைந்துள்ளனர்.

இதன் காரணமாக நெடுஞ்சாலையில் பயணிக்கும்போது கவனமாக இருக்குமாறு மக்களுக்கு காவல்துறை கோரிக்கை விடுத்துள்ளது