திருமலையில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது!

திருமலையில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது!

திருகோணமலை - கந்தளாய் பகுதியில் சட்டவிரோதமாக முச்சக்கரவண்டியில் கொண்டு செல்லப்பட்ட மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறைக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய இன்று (13) முற்பகல் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதானவர் கந்தளாய் - பேராறு பகுதியை சேர்ந்த 22 வயதான இளைஞர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைதானவரிடம் இருந்து சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட 19 மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மதுபான போத்தல்களை கொண்டு செல்வதற்காக பயன்படுத்தப்பட்டுள்ள முச்சக்கரவண்டியை கைப்பற்றியுள்ள காவல்துறையினர், சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்