இன்றும் நாளையும் மதுவரி திணைக்கள அதிகாரிகளினால் விசேட சுற்றிவளைப்புகள்

இன்றும் நாளையும் மதுவரி திணைக்கள அதிகாரிகளினால் விசேட சுற்றிவளைப்புகள்

நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகள் மூடப்பட்டுள்ள இன்றும் நாளையும் விசேட சுற்றிவளைப்புக்களை முன்னெடுக்கவுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மதுவரி திணைக்கள ஊடகப் பேச்சாளரும் ஆணையாளருமான கப்பில குமாரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த சுற்றிவளைப்புகளுக்காக 1,200 அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்