வெளிநாட்டில் சிக்கியிருந்த பல இலங்கையர்கள் இன்று நாடு திரும்பினர்

வெளிநாட்டில் சிக்கியிருந்த பல இலங்கையர்கள் இன்று நாடு திரும்பினர்

வெளிநாட்டில் சிக்கியிருந்த மேலும் 1,124 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

இவர்களில் கட்டார் மற்றும் டோஹாவைச் சேர்ந்த 329 பயணிகள் உள்ளனர்.

இந்த குழுவை தனிமைப்படுத்தும் பணிக்காக இலங்கை இராணுவம் அழைத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இந்த காலக்கட்டத்தில் சீனா, ரஷ்யா, நெதர்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்தில் இருந்து 141 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் 50 பயணிகள் விமானங்களை இயக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது