இரகசியத் தகவலையடுத்து மட்டக்களப்பில் முற்றுகையிடப்பட்ட நிலையம்!
வாழைச்சேனையில் போலி ஆவணங்கள் தயாரிப்பு நிலையம் ஒன்று பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று இரவு நடைபெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பிறைந்துரைச்சேனை பகுதியில் போலி ஆவணங்கள் தயாரிப்பு நிலையம் ஒன்று பொலிஸாரல் முற்றுகையிடப்பட்டு சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து போலி ஆவணங்கள் மற்றும் உபகரணங்களையும் மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஜயபெரமுன தெரிவித்துள்ளார்.
வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து புலனாய்வுப் பிரிவினர் வாழைச்சேனைப் பொலிஸ் நிலைய பெருங்குற்ற புலனாய்வு பொறுப்பதிகாரி ஈ.எல்.பதுர்தீன் தலைமையிலான பொலிஸார் ஒன்றிணைந்து நேற்று இரவு பிறைந்துரைச்சேனை பகுதியிலுள்ள குறித்த வீட்டை சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர்.
இதன்போது ஆவணங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 44 வயதுடைய ஒருவரை கைது செய்ததுடன் ஆவணம் தயாரிப்பதற்காக பயன்படுத்திய மடிகணணி, பிறிண்டர், இறப்பர் முத்திரைகள் பதின்மூன்று, சான்றிதழ்கள் என்பனவற்றை மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுவருவதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.