13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்; இரு வயோதிபர்கள் உட்பட மூவர் கைது!
13 வயது சிறுமியை மிரட்டி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய இரு வயோதிபர்கள் உட்பட 3 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தின் வடமதுரை பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கல்லுப்பட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான 37 வயதான சந்தேகநபர், 8ஆம் தரத்தில் பயிலும் மாணவி ஒருவர் வீட்டில் தனியாக இருந்ததை நோட்டமிட்டுள்ளார்.
பின்னர் அவருக்கு இனிப்பு உள்ளிட்ட தின்பண்டங்களை கொடுத்து தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார்.
இதை அறிந்த அதே பகுதியை சேர்ந்த 65 வயதான ஒருவரும் 70 வயதான ஒருவரும் அச்சிறுமியை தமது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.
இதுதொடர்பாக கிராம மக்கள் சிறுமியின் பெற்றோருக்கு அறிவித்ததையடுத்து, இச்சம்பவம் தொடர்பான தகவல்கள் வெளிவந்துள்ளன.
அதற்கமைய காவல்துறையில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்து இரு வயோதிபர்கள் உள்ளிட்ட சந்தேகநபர்கள் மூவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்