எதிர்வரும் இரு தினங்களில் 30 தொடருந்து சேவைகள் ரத்து
எதிர்வரும் பண்டிகை காலத்தில் அலுவலக தொடருந்து உட்பட சுமார் 30 தொடருந்து சேவைகள் ரத்து செய்ய புகையிரத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, நாளை (13) மற்றும் நாளை மறுதினம் (14) ஆகிய இரண்டு நாட்கள் மாத்திரம் தொடருந்து சேவைகள் ரத்து செய்யப்படும் என அத்திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இருப்பினும், புத்தாண்டை முன்னிட்டு வெளிமாவட்டங்களுக்கு பயணிப்பவர்களுக்கும், மீண்டும் கொழும்பு திரும்புவோருக்கும் வழக்கமை போல விசேட தொடருந்து சேவைகள் இயக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.