அதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற முறையில் பயணித்த இளைஞர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

அதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற முறையில் பயணித்த இளைஞர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற முறையில் மகிழுந்தில் பயணித்த இளைஞர்கள் இன்று அதிகவேக நெடுஞ்சாலையின் சுற்றுலா காவல்துறை பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இன்று முற்பகல் 10 மணியளவில் குறித்த பிரிவில் முன்னிலையாகுமாறு கண்டி காவல்துறையினர் ஊடாக அவர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

நீல நிறமான குறித்த மகிழுந்தின் கதவுகளில் அமர்ந்தவாறு அதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற முறையில் பயணித்த சில இளைஞர்களின் காணொளி தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது.

குறித்த மகிழுந்து கொழும்பில் இருந்து காலி நோக்கி தெற்கு அதிகவேக நெடுஞ்சாலையில் பயணித்தமை தெரியவந்துள்ளது.

பாதுகாப்பற்ற முறையில் பயணித்த மகிழுந்து தொடர்பில் நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோவுக்கு அறிவிக்கப்பட்டமையை அடுத்து அவ்வாறு பயணித்தவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறு அவர் காவல்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.